உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை பிரம்மோற்சவம்: 252 கூடுதல் பஸ்கள்!

திருமலை பிரம்மோற்சவம்: 252 கூடுதல் பஸ்கள்!

திருப்பதி: திருமலை ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவத்திற்கு, கூடுதலாக, 252 பஸ்கள் இயக்கப்படும்’ என, திருப்பதி சாலை போக்குவரத்துக் கழக மண்டல மேலாளர், மகேஸ்வர ரெட்டி தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது:திருமலை பிரம்மோற்சவம், வரும் 26ம் தேதி துவங்குகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஏராளமான பக்தர்கள், இதில் பங்கேற்பர். எனவே, ஆந்திர சாலை போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த, 126 பஸ்கள் மற்றும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த, 126 பஸ்கள், இம்மாதம், 24ம் தேதி முதல் அடுத்த மாதம், 7ம் தேதி வரை கூடுதலாக இயக்கப்படும்.தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரம், விழுப்புரம், சென்னை, தர்மபுரி பணிமனைகளைச் சேர்ந்த பஸ்கள், தினமும், திருமலை மற்றும் திருப்பதிக்கு இயக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !