வேளாங்கண்ணியில் பெரிய சப்பர பவனி!
ADDED :4052 days ago
நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி,ஆரோக்கிய மாதா தேவாலயத்தில், நேற்று இரவு, பெரிய சப்பர பவனி நடந்தது.தேவாலய ஆண்டுத் திருவிழா, ஆக., 29ம் தேதி துவங்கியது. வரும், 8ம் தேதி வரை, விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.நேற்று இரவு, விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, தஞ்சை பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில், 20 பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டுப்பாடல் திருப்பலியும், பெரிய சப்பர பவனியும் நடைபெற்றது.இன்று, மாதா பிறந்த நாளை முன்னிட்டு, காலை, 6:00 மணிக்கு கூட்டுப்பாடல் திருப்பலி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, மாதா உருவம் பொறித்த கொடி இறக்கப்பட்டு, விழா நிறைவடைகிறது.