நடராஜர் கோவிலில் மகா அபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!
சிதம்பரம்: சிதம்பரம் சபாநாயகர் கோவில் நடராஜர் சுவாமிக்கு ஆவணி மாதம் மகா அபிஷேகத்தை பல்லாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பூலோக கைலாயம் என அழைக்கப்படும் பிரசித்திப் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிற்சபையில் அமர்ந்துள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய 6 முறை மகா அபிஷேகம் நடைபெறும். இதில் ஆனித் திருமஞ்சனம், மார்க்கழி ஆரூத்ரா தரிசனம் மகா அபிஷேகம் ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் அதிகாலை வேளையில் நடக்கிறது. மற்ற மாதங்களில் நடக்கும் மகா அபிஷேகம் பொதுதீட்சிதர்கள் சார்பில் நடராஜர் சன்னதி கனகசபையில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு மாலை வேளையில் மாக அபிஷேகம் நடைபெறும். ஆவணி மாத நடராஜர் மகா அபிஷேகம் நேற்று நடந்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் காலை முதல் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் நடராஜர் சுவாமிக்கு சிறப்பு மந்திரங்கள் பாடி, பூணுõல் அணிவிக்கப்பட்டு வெந்நீர் அபிஷேகம் நடந்தது. இதில் எண்ணெய்காப்பு, பால், தயிர், இளநீர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், பூ, விபூதி போன்ற பல்வேறு பொருள்கள் அடங்கிய வாசனை திரவியங்கள் மூலம் மகா அபிஷேகம் நடைப்பெற்று மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.