உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வக்குபேரர் கோவில் கும்பாபிஷேகம்!

செல்வக்குபேரர் கோவில் கும்பாபிஷேகம்!

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த ஓங்கூர் கிராமத்தில் செல்வக்குபேரர்  கோவில்  கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை  முன்னிட்டு கடந்த 1 ம் தேதி காலை யாகசாலை பூஜைகள் துவங்கியது. ஆனந்தநர்த்தன விநாயகர், நவக்கிரகங்கள்,  கன்னிகாபரமேஸ்வரி, செல்வக்குபேரர், அரவிந்தர், அன்னை, ஷீரடி சாய்பாபா ஆகிய சன்னதிகளில் யாகசாலை பூஜைகளை சென்னை வடபழனி குமார் சிவாச்சாரியார் தலைமையிலும், லக்ஷ்மி நாராயணன்,  லக்ஷ்மி ஹயக்ரிவர்,  ஆஞ்சநேயர்,  துவஸ்தம்பம், கருடாழ்வார் சன்னதிகளில் யாகசாலை பூஜைகளை சென்னை ரங்கராஜ பட்டாச்சாரியார் தலைமையிலான குழுவினர் செய்தனர்.  4ம் தேதி காலை 4ம் கால யாகசாலை பூஜைகள், முடிந்து விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அனைத்து சன்னதி மூலவர்களுக்கு  மகா அபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத் தில் தீபாராதனை நடந்தது. 9 மணிக்கு, லக்ஷ்மி நாராயணன் துவஸ்தம்பத்தில் கொடியேற்றம் நடந்தது.  விழா ஏற்பாடுகளை கோவில் அமைப்பாளர் ரவீந்திரன் மற்றும் விழா  குழுவினர்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !