உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் வாசற்படி அருகால் பூஜை

கள்ளக்குறிச்சி மாரியம்மன் கோவில் வாசற்படி அருகால் பூஜை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பழைய மாரியம்மன் கோவில் முதல் நிலை வாசற்படி அருகால் பூஜை நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி தியாகதுருகம் சாலையில் நூற்றாண்டு கடந்து பெருமை பெற்ற பழைய மாரியம்மன் கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. நேற்று அருகால் பூஜை நடந்தது. விநாயகர் வழிபாடு செய்த பின் கும்பாபிஷேகம் துரிதமாக நடைபெற வேண்டி பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து கிரேன் மூலம் கோவிலின் முதல்நிலை வாசற்படிக்கு கருங்கல்லால் ஆன அருகால் வைத்து பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !