தும்பூர் அன்னை ஆலயத்தில் ஆண்டு பெருவிழா தேர்பவனி!
ADDED :4046 days ago
விழுப்புரம்: தும்பூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா நடந்தது. விக்கிரவாண்டி தாலுகா தும்பூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றம், கடந்த 29ம் தேதி நடந்தது. கல்பட்டு புனித வனத்து சின்னப்பர் ஆலய அதிபர் ஆரோக்கியதாஸ் அடி களார், கொடியேற்றத்தை துவக்கி வைத்தார். கடந்த 8ம் தேதி திருப்பலி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய சாம்ஸ் நிறுவன இயக்குநர் அருள்தாஸ், ஆரோக்கிய அன்னையின் ஆடம்பர தேர்பவனியை துவக்கி வைத்தார். விழுப்புரம் புனித சவேரியார் பங்கு தந்தை ஹென்றி எழில்மாறன், உதவி பங்கு தந்தை தெய்வநாயகம், முன்னாள் கவுன்சிலர் இயேசுராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.