பூவராக சுவாமி கோவில் கும்பாபிஷேகம்: வரும் 2015 பிப்ரவரி 5ல் நடக்கிறது!
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கிறது. ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் மகா கும்பாபிஷேக பணிகளுக்காக 13வது நிதி ஆணையம் மூலம் 60 லட்சம் ரூபாய் மற்றும் தமிழக அரசு மூலம் 9 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது. ஒரு சில பணிகள் நடைபெறாமல் இருப்பதால் கும்பாபிஷேக பணிகள் தள்ளி ப்போனது. இந்நிலையில் மகா கும்பாபிஷேகம் நடத்தும் தேதி குறிப்பது பற்றிய ஆலோசனை செய்வதற்கான திருப்பணிகுழுக் கமிட்டி கூட்டம் தலைவர் சண்முகம் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், கோவில் திருப்பணிகளை விரைந்து முடிப்பது. வரும் 2015ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை கோவில் மகா கும்பாபிஷேகம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. செயல் அலுவலர் முருகன், அ.தி.மு.க., மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, நகர செயலர் கேசவன், திருப்பணிக்குழு உறுப்பினர்கள் குணசேகரன், சண்முகம், பாரதி, பழனிவேல், செல்வராஜ், சின்னப்பன், சதானந்தம், பேரூராட்சி துணைத் தலைவர் சின்னப்பன், கணக்கர் வீரராகவன் உட்பட பலர் பங்கேற்றனர்.