திருக்கோளநாதர் கோயிலில் பவுர்ணமி கிரிவலம்!
ADDED :4048 days ago
திருப்புத்தூர் : திருக்கோளக்குடி, திருக்கோளநாதர்-ஆத்மநாயகி அம்பாள் கோயிலில், 166 வது பவுர்ணமி கிரிவலம் நடந்தது.மலையடிவாரத்தில், கோயில் குருக்கள் நமச் சிவாயம் தீபாராதனை, காண்பித்து கிரிவலத்தைத் துவக்கினார்.கிரிவலப் பாதையில் உள்ள, கிராம பரிகாரத் தெய்வங்கள் வழிபாடு நடந்தது.பின்னர், சுவாமிக்கும் அம்பாளுக்கும், சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏற்பாட்டினை கிரிவலக் கமிட்டி ஒருங்கிணைப் பாளர் சந்திரன் செய்திருந்தார்.