ஜெகந்நாத பெருமாள் நவராத்திரி உற்சவம் செப்., 24ல் துவக்கம்
ADDED :4160 days ago
கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த நாதன்கோயில் ஜெகந்நாதப் பெருமாள் திருக்கோவிலில், நவராத்திரி உற்சவம் வரும், 24ம் தேதி தொடங்கி அக்டோபர், 2ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாதன்கோயில் கிராமத்தில் உள்ள இத்தலத்தில், கோவில் கொண்டுள்ள செண்பகவல்லி சமேத ஜெகந்நாதப் பெருமாளை பிரம்மன், மார்க்கண்டேயர், சிபி சக்கரவர்த்தி ஆகியோர் வழிபட்டு, பேறு அடைந்த தலம். நந்திக்கு சாப விமோசனம் செய்த ஒரு புராண தலம் என்ற சிறப்பும் உடையது. இந்த கோவிலில் வரும், 24ம் தேதி நவராத்திரி உற்சவம் தொடங்குகிறது. உற்சவ காலங்களில் காலை, 9 மணிக்கு தாயார் திருமஞ்சனம், மாலை, 6 மணிக்கு உள்பிரகார புறப்பாடும் நடைபெறுகிறது.