சேலம் ராஜகணபதிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம்!
ADDED :4015 days ago
சேலம்: சேலம் டவுன் ராஜகணபதி கோவிலில் கடந்த மாதம் 29ம் தேதி முதல் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளான நேற்று காலை ராஜ கணபதிக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.