காளியம்மன் கோவில் சுவாமி உற்சவ பெருவிழா!
ADDED :4047 days ago
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை தாலுகா மூலசமுத்திரம் கிராமத்தில் காளியம்மன் கோவில் சுவாமி உற்சவ பெரு விழா நடந்தது. இதையெ õட்டிகடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. கடந்த 9ம் தேதி காளியம்மன் சுவாமி, விநாயகர், வள்ளி தெய்வானை முருகன், அய்ய னார், மாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. நேற்று முன்தினம் சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் ஒலையனுõரில் இருந்து வரவழைத்து மூலசமுத்திரம் கிராமத்தில் உற்சவ விழா நடந்தது. இன்று சுவாமி வீதியுலாவுடன் விழா முடிகிறது. நிகழ்ச்சியில் மூலசமுத்திரம், பு.கொணலவாடி, ஒலையனுõர், எம்.எஸ். தக்கா, உளுந்தூர்பேட்டை பகுதிகளில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் செல்வக்குமார், ஒன்றிய கவுன்சிலர் ஜெயக் குமார் செய்திருந்தனர்.