உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 10 அடி உயர ஆஞ்சநேயர் குன்றத்தில் கற்சிலை தயார்!

10 அடி உயர ஆஞ்சநேயர் குன்றத்தில் கற்சிலை தயார்!

திருப்பரங்குன்றம் : தேனி மாவட்டம் பூதிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக மதுரை திருப்பரங்குன்றத்தில் 10 அடி உயரத்தில் நான்கரை டன் எடையில் அஞ்சலி ஆஞ்சநேயர் கற்சிலை தயாராகிறது. சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முருகன் கூறியதாவது: ஒரே கல்லில் சிலை தயாராகிறது.

ஆறு மாதங்களாக இப்பணி நடக்கிறது. அடுத்த மாதம் கோயிலுக்கு சிலை அனுப்பப்படும். செங்கற்பட்டு கோயிலுக்காக 7 அடி உயரத்தில் ஒன்னே முக்கால் டன் எடையில் மதுரை வீரன் சிலை, கோவை கோயிலுக்காக ஏழே கால் அடி உயரம், 2 டன் எடையில் கருப்பசாமி கற்சிலைகள் தயாராகின்றன. முதல்முறையாக ஆறேகால் அடி உயரம், 4 டன் எடையில் பாலாம்பிகை சிலை தயாரித்து கொடுத்துள்ளோம். புதுடில்லி மாரியம்மன் கோயில், மகாராஷ்டிராவிற்கு மெகா சைஸ் கிருஷ்ணர் சிலை தயாரித்து கொடுத்துள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !