கோடாங்கிபட்டி செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4044 days ago
தேனி : கோடாங்கிபட்டி செல்வவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தேனி அருகே கோடாங்கிபட்டியில் மெயின்ரோட்டோரத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த செல்வவிநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டது. நேற்று காலை 8.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. சிவாச்சாரியார்கள் கும்பங்களுக்கு தண்ணீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். மதுரை, தேனி, பழனிசெட்டிபட்டி, மாரியம்மன்கோயில்பட்டி, கோடாங்கிபட்டி, திருச்செந்தூர், வளையபட்டி, போடேந்திரபுரம், காமராஜபுரம் உட்பட பல பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். கோயில் சார்பில் பழனிக்குமார், ராஜரத்தினம், விழாக்குழு தலைவர் ராமராஜ், செயலாளர் சின்னச்சாமி, இணை செயலாளர் தங்கம், பொருளாளர் கணேசன், சுந்தர்ராஜ் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். அன்னதானம் நடைபெற்றது.