கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் வித்யகல்யாண உற்சவம்
ADDED :4043 days ago
கள்ளக்குறிச்சி: புரட்டாசி மாதத்தையொட்டி கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் வித்யகல்யாண உற்சவம் நடக்கிறது. கள்ளக்குறிச்சி புண்டரீக வள்ளி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தையொட்டி தினம் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. புரட்டாசி 1ம் தேதி கிருஷ்ண பகவானுக்கு உரியடி உற்சவம், 2ம் தேதி நித்ய கல்யாண உற்சவம் துவங்குகிறது. 24 நாட்கள் பெருமாளுக்கும் தாயாருக் கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தேசிக பட்டர் தலைமையில் பண்ருட்டி ராமன் பட்டர் குழுவினர் திருக்கல்யாண உற்சவத்தை நடத்தி வைக்கின்றனர்.