உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சந்தோஷ சாரல்!

மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) சந்தோஷ சாரல்!

திட்டமிட்டு செயலாற்றும் மிதுன ராசி அன்பர்களே!

6ல் செவ்வாய், 2ல் குரு, 4ல் புதன், 3ல் சுக்கிரன் என கிரகங்கள் மாதம் முழுவதும் நற்பலனைத் தர காத்திருக்கின்றனர். குருபலத்தால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். விருப்பம் போல ஆடை, ஆபரணம் வாங்கி மகிழலாம். வாழ்வில் சந்தோஷம் கூடும். முயற்சியில் எளிதாக வெற்றி கிடைக்கும். செப். 26 க்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடு நீங்கி சுமூக நிலை உருவாகும். தேவையான வசதி, வாய்ப்பு பெருகும். பிரிந்த தம்பதியினர் ஒன்று கூடுவர். சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். பயணத்தின் போது சற்று கவனமாக இருப்பது நல்லது.

தொழில், வியாபாரத்தில் சீரான வளர்ச்சியும், லாபமும் அமைந்திருக்கும். விரிவாக்கம் குறித்த சிந்தனை மேலோங்கும். தொழில் ரீதியான பயணத்தால் நன்மை உண்டாகும். பணியாளர்களுக்குத் திறமைக்கு ஏற்ற நல்ல பெயரும், மதிப்பும் கிட்டும். கோரிக்கைகளில் பெரும்பகுதி நிறைவேறும். பதவி உயர்வும் கிடைக்கும். போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள்  சிறப்பான பலன் காண்பர்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை தொடர்ந்து பெறுவர். வருமானத்திற்கு சிறிதும் குறை இருக்காது. எதிர்பார்த்த பாராட்டு, புகழ் கிடைக்கும். அரசியல்வாதிகள் விரும்பிய பதவி கிடைக்கப் பெறுவர்.

விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு வழியில் வருமானம் வந்து கொண்டே இருக்கும். புதிய சொத்து வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

மாணவர்கள் வெளியூர், வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்க பெறுவர். புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி காண்பர்.  பெண்களால் குடும்பம் சிறப்படையும். குடும்பத்தாரிடம் செல்வாக்கு உயரும். புத்தாடை, அணிகலன் வாங்கி மகிழ்வர்.

நல்ல நாள்: செப்.17, 18, 21, 22, 23, 29, 30, அக். 1, 2, 7, 8, 9, 10, 11, 14, 15

கவன நாள்: அக். 3, 4 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,7,9                 நிறம்: வெள்ளை, பச்சை

வழிபாடு: சிவன், பெருமாள் கோவிலுக்குச் சென்று வாருங்கள். தினமும் சூரிய வழிபாடு நடத்துங்கள். ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கையை வணங்கி வாருங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !