வன்னியபெருமாள் கோவிலில் லட்சுமி ஹயக்ரீவர் வீதியுலா!
ADDED :4156 days ago
புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில், லட்சுமி ஹயக்ரீவர் அவதார தினத்தை முன்னிட்டு, சுவாமி வீதியுலா நடந்தது. முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில், கடந்த 7 ம் தேதி லட்சுமி ஹயக்ரீவர் அவதார தினவிழா துவங்கியது. தொடர்ந்து, மல்லிகை, முல்லை, செவ்வலரி ஆகிய மலர்களால் சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு வந்தது. அதன்படி, 5ம் நாளான நேற்றுமுன்தினம் மாலை மலர்களால், சுவாமிக்கு அர்ச்சனைகள் செய்யப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரினம் செய்து கொணடனர். இரவு 9.00 மணிக்கு லட்சுமி ஹயக்ரீவர் சுவாமி வீதியுலா நடந்தது.