பகவதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
லாலாப்பேட்டை: லாலாப்பேட்டை அடுத்த கீழசிந்தலவாடி விநாயகர், பகவதியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, லாலாப்பேட்டை காவிரி ஆற்றிலிருந்து பக்தர்கள் புனித நீர் எடுத்து செல்லுதல், விக்னேஸ்வர பூஜை, லட்சுமி பூஜை, தனபூஜை, கணபதி பூஜை, மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடந்தது. முதலாம் யாகசாலை பூஜைகள், துவங்கப்பட்டு, விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாஜனம், வேதிகை பூஜை, 108 த்ரவிய ஹோமங்கள் மற்றும் தீபாரதனை நடந்தது. நேற்று முன்தினம் காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், துவங்கப்பட்டு பல்வேறு சிறப்பு ஹோமங்களை, கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. விநாயகர் மற்றும் பகவதியம்மன் கோவில், கோபுர கலசங்களுக்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை கருப்பத்தூர் செங்கோட்டுவேல் குருக்கள் நடத்தி வைத்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.