பிரதோஷ வழிபாடு இல்லாத சிவாலயம்
ADDED :5294 days ago
சிவன் கோயில்களில் நவக்கிரக சன்னதி தனியாக இருக்கும். ஆனால், புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோயிலில் நவக்கிரகங்கள் மூன்று தூண்களில் இருக்கின்றன. மேலும், கருவறையில் லிங்கத்திற்கு பதிலாக வெறும் ஆவுடையாரும் (பீடம்), அம்பாளுக்கு பதிலாக அவளது திருவடிகளும் மட்டுமே உள்ளது. பிரதோஷ வழிபாடு இல்லாத இத்தலத்தில், நந்தி, கொடிமரம், பலிபீடம், சண்டிகேஸ்வரர் ஆகியோரும் இல்லை. இறைவன் எங்கும் நிறைந்திருக்கும் போது அவனுக்கென, குறிப்பிட்ட ஒரு இடத்தில் எப்படி பூஜை நடத்தமுடியும் என்பதால் இங்கு வழிபாடு ஏதுமில்லை. விழாக்களின் போது மாணிக்கவாசகர் மட்டுமே உலா வருவார்.