காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி வழிபாடு துவக்கம்!
ADDED :4072 days ago
மேட்டுப்பாளையம் : காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாத வழிபாடு நேற்று துவங்கியது. காரமடை அரங்கநாத சுவாமி கோவில், கொங்கு மண்டலத்திலேயே பிரசித்தி பெற்ற தலைமை வைணவத் தலம். இங்கு சுயம்பு வடிவில் பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். நேற்று புரட்டாசி மாதம் துவங்கியதை அடுத்து, திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, பெருமாள் சுவாமியை வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.இந்தாண்டு புரட்டாசி முதல் சனிக்கிழமை விழா வரும் 20ம் தேதி நடைபெற உள்ளது. 23ம் தேதி மஹாளய அமாவாசையும், 25ம் தேதி நவராத்திரி உற்சவமும் நடக்கிறது. 27ம் தேதி இரண்டாவது சனிக்கிழமையும், அக். 3ம் தேதி சரஸ்வதி பூஜையும், 4ம் தேதி மூன்றாம் சனிக்கிழமை விழாவும், விஜயதசமியும் நடக்கிறது.