ராஜகோபால சுவாமி கோவிலில் உறியடி திருவிழா!
ADDED :4072 days ago
விருத்தாசலம்: ராஜகோபால சுவாமி கோவிலில் உறியடி திருவிழாவையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விருத்தாசலம் பெரியார் நகர் ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி கோவிலில், யாதவ மகா சபை சார்பில் 8ம் ஆண்டு உறியடி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, காலை பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 7:30 மணியளவில் கோவில் வளாகத்தில் உறியடி திருவிழா, வழுக்குமரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத் தில் ராஜகோபால சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.