நவசக்தி விநாயகர் கோவிலில் மண்டலாபிஷேகம்!
ADDED :4138 days ago
திருவாலங்காடு: வசக்தி விநாயகர் கோவிலில், நேற்று, மண்டலாபிஷேகம் நடந்தது. திருவாலங்காடு பகுதியில் உள்ள, திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில், நவசக்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் புதியதாக பாலமுருகன், அய்யப்பன் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய திருவுருவ சிலைகள், கடந்த, 12ம் தேதி பிரதிஷ்டை செய்து, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து, நேற்று, மண்டலாபிஷேக விழா ஆலையின் தலைவர் எத்திராஜ், நிர்வாக மேலாண்மை இயக்குனர் மலர்விழி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. விழாவை ஓட்டி, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 18 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, மூலவர் கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.