ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை!
ADDED :4146 days ago
நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.நெல்லிக்குப்பம் அருள்தரும் ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல்நாள் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம். புரட்டாசி மாதப்பிறப்பை முன்னிட்டு ஐயப்பனுக்கு பால் தயிர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் சுவாமி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பூஜைகளை முருகன் குருக்கள் செய்தார். குமார், சிவகுருநாதன், ராஜாராம், முருகன், சாமிபிள்ளை உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.