விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா!
ADDED :4091 days ago
கோவை: விஸ்வ கர்மா சமுதாய மக்களால் கொண்டாடப்படும், விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா, ஆர்.டி.எம்., தெலுங்கு விஷ்வ கர்மா உறவின்முறை சமூக திருமண மண்டபத்தில், நடந்தது. விழாவில், சங்க தலைவர் ரங்கராஜன் தலைமையேற்றார். மக்கள் நலன், சமூக அமைதி, மழை, வரன் வேண்டுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நடத்தப்பட்ட பூஜையில், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சேகர் மற்றும் சமூக மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.