திருவண்ணாமலையில் 1,008 மூலிகை சிறப்பு யாகம்!
ADDED :4091 days ago
திருவண்ணாமலை: இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டி, காகாஸ்ரமத்தில், 1,008 சிறப்பு மூலிகை யாகம் நடந்தது.திருவண்ணாமலை அருகே பெரியகுளத்தில் உள்ள காகாஸ்ரமத்தில் இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் மக்களை பாதுகாக்க வேண்டி, 1,008 மூலிகைகளால் சிறப்பு யாகத்தை தர்மலிங்க ஸ்வாமி நடத்தி வைத்தார்.இதனை தொடர்ந்து, மக்களின் வாழ்க்கை வளம் பெறவும், நினைத்த காரியங்கள் அனுகூலமாகவும், தீய பலன்கள் நீங்கிடவும், வரும் அக்டோபர் மாதம், 26ம் தேதி முதல் நவம்பர், 2ம் தேதி வரை, பைரவர் சிறப்பு அபிஷேகம் நடக்க உள்ளது.
பவுர்ணமி தோறும் இலவசமாக காகபுஜண்டரின் ஜீவநாடி இலவசமாக வாசிக்கப்படுகிறது, மேலும், வியாழக்கிழமை தோறும் மெய்ஞான தீட்சை வாசியோகம் பயற்சி அளிக்கப்படுகிறது. இதில், ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு பயனடையலாம், என, தர்மலிங்க சுவாமி தெரிவித்தார்.