இன்று திருப்பதி குடை ஊர்வலம்!
ADDED :4081 days ago
சென்னை: திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புறப்படுகிறது. பாரிமுனை, சென்னகேசவப்பெருமாள் கோவிலில் காலை 10:00 மணிக்கு, சிறப்பு பூஜைகளுடன் திருக்குடை ஊர்வல விழா, 11:00 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு, மாலை 4:00 மணியளவில் யானைகவுனி வர உள்ளது. தொடர்ந்து அயனாவரம், பெரம்பூர், திரு.வி.கநகர், பாடி, அம்பத்துார் வழியாக திருப்பதி செல்கிறது.