தசரா திருவிழாவை முன்னிட்டு 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்!
பெங்களூரு: தசரா விழாவை முன்னிட்டு, 400 சிறப்பு பஸ்களை இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இவை, இன்று முதல் இயக்கப்படுகின்றன. மைசூரு ரோடு பஸ் நிலையத்திலிருந்து, மைசூருக்கு, 170 சிறப்பு பஸ்கள். மைசூரு ரோடு பஸ் நிலையத்தில் இருந்து, தர்மஸ்தலா, குக்கே சுப்ரமண்யா, சிருங்கேரி, ஹொரநாடு, ஷிமோகா, மடிகேரி, மங்களூரு, தாவணகரே, கோகர்ணா, கொல்லுார், ஹூப்ளி, தார்வாட், பெல்காம், பிஜாப்பூர், கார்வார், பெல்லாரி, ஹொஸ்பேட், குல்பர்கா, ராய்ச்சூர் ஆகிய இடங்களுக்கு சிறப்பு பஸ்கள். கர்நாடகாவிலிருந்து, ஹைதராபாத், சென்னை, ஊட்டி, கொடைக்கானல், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, ஷிரடி, பஞ்சிம், எர்ணாகுளம், மும்பை, பாலக்காடு, தி ருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கும் சிறப்பு பஸ்கள்.மைசூருக்கு மட்டுமின்றி, சுற்றுலா தலங்களான சாமுண்டி மலை, கே.ஆர்.எஸ்., அணை, பிருந் தாவன், ஸ்ரீரங்கப்பட்டணா, நஞ்சன்கூடு, மாண்டியா, மலவள்ளி, ஹெச்.டி., கோட்டே, சாம்ராஜ் நகர், ஹூன்சூர், கே.ஆர்., நகர் ஆகிய பகுதிகளுக்கு, 230 சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.