தேவபாண்டலத்தில் அமாவாசை திருவிழா!
ADDED :4363 days ago
சங்கராபுரம்: சங்கராபுரம்அடுத்த தேவபாண்டலத்தில் அமாவாசை திருவிழா நடந்தது. தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசை திருவிழாவை முன்னிட்டு காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி, தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.