தூய குழந்தை தெரசாள் ஆலயத்தில் கொடியேற்று விழா!
ADDED :4080 days ago
ராமேஸ்வரம் : தங்கச்சிமடத்தில் உள்ள தூய குழந்தை தெரசாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் ஆலய வளாகத்தில் விழா கொடியை பங்குதந்தை ராஜாஜெகன் ஏற்றி வைத்தார். இதனை தொடர்ந்து 10 நாட்கள் சர்ச்சில் நவநாள் திருப்பலி பூஜை நடைபெறும். அக். 1 ல், நடைபெறவுள்ள திருவிழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி பூஜையும், அலங்கார தேரில் குழந்தை தெரசாள் திருஉருவ சிலை தேர்பவனியும் நடைபெறும். அக்., 2 ல், திருவிழா நிறைவு திருப்பலி பூஜை நடைபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை இறைமக்கள் செய்து வருகின்றனர்.