உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவராத்திரி உற்சவ விழா!

நவராத்திரி உற்சவ விழா!

கீழக்கரை : கீழக்கரை தட்டார்தெருவில் உள்ள உக்கிர வீரமாகாளி அம்மன் கோயிலில் 39 ம் ஆண்டு நவராத்திரி உற்சவ விழா தொடங்கியது. இன்று இரவு 7 மணியளவில் காப்புகட்டுதல் வைபவமும், வெள்ளியன்று 108 விளக்குபூஜையும் நடைபெறும். ஆக., 3 வரை ஒன்பது நாட்களுக்கும் காலை 9 முதல் 10 மணி வரை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று "சக்தி தத்துவத்தின் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார். ஆன்மிக சொற்பொழிவுகள், சகஸ்ரநாம பூஜைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !