திரவுபதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா துவக்கம்!
கடம்பத்துõர் : கடம்பத்துõர், திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று, நவராத்திரி திருவிழா துவங்கியது. கடம்பத்துõர் ஊராட்சி, கசவநல்லாத்துõரில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று, 80ம் ஆண்டு, விஜயதசமி திருவிழாவும், 41ம் ஆண்டு, நவராத்திரி திருவிழாவும் துவங்கியது. நேற்று, காலை 9:00 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேகமும் நடந்தது. அதன்பின், மாலை, ஆதிபராசக்தி வேடத்தில் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, திருவீதி உலா நடந்தது.
நாள் அம்மன் அலங்காரம் மூலவர் அலங்காரம்
செப். 25 குங்கும காப்பு மீனாட்சி
செப். 26 சிகப்பு குங்கும காப்பு ராஜராஜேஸ்வரி
செப். 27 சந்தனக்காப்பு மகாலட்சுமி
செப். 28 பச்சை குங்கும காப்பு மாவடி
செப். 29 மாவு காப்பு சரஸ்வதி
செப். 30 ரோஸ் குங்கும காப்பு அன்னபூரணி
அக். 1 வெள்ளி கவசம் ரத சாரதி
அக். 2 மஞ்சள் காப்பு மகிஷாசூரமர்த்தினி
அக். 3 வெள்ளி கவசம் மகாசக்தி ஊர்வலம்
அக். 4 சந்தனக்காப்பு விடையாற்றி