உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானியம்மன் கோவிலில் பால்குட அபிஷேக விழா!

பவானியம்மன் கோவிலில் பால்குட அபிஷேக விழா!

ஊத்துக்கோட்டை: பவானியம்மன் கோவிலில், 23ம் ஆண்டு, பால்குட அபிஷேக விழா நடைபெற்றது. பெரியபாளையம், பவானியம்மன் கோவி லில், ஆடி மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமை துவங்கி, 13 வாரங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில்  இருந்து, திரளான பக்தர்கள் குடும்பத்துடன் சென்று அம்மனை வழிபடுவர். இங்குள்ள தர்மராஜா கோவில் தெருவில் இருந்து, பக்தர்கள், 23ம் ஆண்டு  பால்குட அபிஷேக விழா நடந்தது. நேற்று முன்தினம், மாலை, அப்பகுதி  பெண்கள் தலையில் பால்குடம் ஏந்தி கோவிலுக்குச் சென்றனர்.  அப்போது  பக்தர்கள் அலகு குத்தியும், உடலில் அலகு குத்திக் கொண்டு அம்மனுக்கு முன் தொங்கிக் கொண்டு, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பக்தர்கள்  கொண்டு வந்த பால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

திருவள்ளூரில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, பாலதிரிபுரசுந்தரி  அலங்காரத்தில்  பெரியகுப்பம் முங்காத்தம்மன்;  திருவெண்காடு புத பகவான்  அலங்காரத்தில் ராஜாஜிபுரம்  பவானி  அம்மன்; தீர்த்தீஸ்வரர் கோவில் காமாட்சி அம்மன்;  ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் திரவுபதி அம்மன் அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !