உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகம் நலம் பெற வேண்டி ஸ்ரீ விஸ்வ சித்தி மகா யாகம்!

உலகம் நலம் பெற வேண்டி ஸ்ரீ விஸ்வ சித்தி மகா யாகம்!

விழுப்புரம்: உலகம் நலம் பெற வேண்டி விஸ்வகர்மா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வ சித்தி மகாயாக பெருவிழா நடந்தது. விழுப்புரத்தில் விஸ்வகர்ம பொன், வெள்ளி ஆபரண தொழிலாளர் சங்கம் மற்றும் எம்.கே.டி., தியாகராஜ பாகவதர் விஸ்வகர்ம நற்பணி மன்றம் இணைந்து விஸ்வ சித்தி மகா யாக பெருவிழா நடந்தது. விஸ்வகர்மா மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் காலை 6:30 மணிக்கு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 7:00 மணிக்கு திருமுறை, வேத பாராயணம், 7:30 மணிக்கு கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 8:00 மணிக்கு மகா தீபாராதனை, 8:30க்கு காயத்ரி தேவி வீதியுலா, 10:30 மணி முதல் உலக நலன் பெற வேண்டி ஸ்ரீ ஆதி சிவலிங்காச்சார்யா பீடம் ஸ்ரீ சிவராஜ சுவாமிகள் தலைமையில் விஸ்வ சித்தி மகா யாகம் நடந்தது. இதில், ஆபரண சங்க செயலாளர் தண்டபாணி, பொருளாளர் அருள், துணை தலைவர்கள் சித்திரவேல், ஸ்ரீதர், எம்கேடி மன்ற தலைவர் பூபதி, செயலாளர் சேகர், துணை தலைவர்கள் பிரகாஷ், பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !