உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாமாத்தூரில் திருவிளக்கு பூஜை!

திருவாமாத்தூரில் திருவிளக்கு பூஜை!

விழுப்புரம்: கிராம விடியல் அமைப்பு ஆண்டு விழாவை யொட்டி திருவாமாத்தூர் தண்டபாணி சுவாமிகள் மடத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. கிராம விடியல் அமைப்பு ஆண்டு விழாவை யொட்டி விழுப்புரம் கிளை சார்பில் திருவாமாத்தூர் தண்டபாணி சுவாமிகள் மடத்தில் நேற்று காலை 10:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் பெண்கள் 200 பேர் பங்கேற்று, விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனர். ஏற்பாடுகளை கிளை மேலாளர் ஏழுமலையான் தலைமையில் கணக்காளர் வினோத்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !