வள்ளலார் பட ஊர்வலம்
ADDED :4076 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் சத் சங்கத்தின் சார்பில் வள்ளலார் உருவப்பட வீதியுலா நடந்தது. வள்ளலாரின் அவதாரத் திருநாளையொட்டி அவரது உருவப்படத்தை, கண்டாச்சிபுரத்தில் வீதியுலாவாக கொண்டு சென்றனர். இதில் தமிழ் வேதவார வழிபாட்டுச்சபையின் தலைவர் பழனியாண்டி, செயலாளர் சிவாலிங்கம் தலைமையில் ஏராளமானோர் திருஅருட்பா பாடலை பாடி வந்தனர். இதில் ஓதுவார்கள் ஞானசம்பந்தம், ஆறுமுகம், சன்னியாசி, பார்த்தீபன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சத்சங்கச் செயலாளர் வசந்தராயன் செய்திருந்தார்.