உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோயிலில் சிறப்பு பூஜையுடன் ’ரோப்கார்’ இயக்கம்!

பழநி கோயிலில் சிறப்பு பூஜையுடன் ’ரோப்கார்’ இயக்கம்!

பழநி: பழநி மலைக்கோயிலில் ’ரோப்கார்’ பராமரிப்பு பணி முடிவடைந்ததால், பக்தர்களின் பயன்பாட்டிற்காக நேற்று முதல் இயக்கப்பட்டது.பழநி வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து 3 நிமிடத்தில் மலைக்கோயிலுக்கு செல்லும் வகையில், ’ரோப்கார்’ தினமும் காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை இயக்கப்படுகிறது. ஆண்டு பராமரிப்பு பணிக்காக ’ரோப்கார்’ ஜூலை 28ல் நிறுத்தப்பட்டது. மேல்தளம், கீழ்தளத்திலுள்ள உருளை, பல்சக்கரங்கள், 8 பெட்டிகள் புதுப்பிக்கப்பட்டன.கடந்த இரண்டு நாட்களாக, ஒவ்வொரு பெட்டியிலும் தலா 300 கிலோ அளவுள்ள எடைக் கற்களை வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அனைத்து பெட்டிகளும் உறுதியாக இருப்பதாக பாதுகாப்பு கமிட்டியினர் சான்றிதழ் வழங்கினர். இதையடுத்து 60 நாட்களுக்கு பின், நேற்று காலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களின் பயன்பாட்டிற்காக ’ரோப்கார்’ இயக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !