வீரட்டானேஸ்வரர் கோவிலில் துர்க்கையம்மனுக்கு கொலு பூஜை!
ADDED :4075 days ago
பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கையம்மனுக்கு நவராத்திரியை முன்னிட்டு கொலு பூஜை நடந்தது. பண்ருட்டி அடுத்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு துர்க்கையம்மனுக்கு நவராத்திரி கொலு பூஜை சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. துர்க்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று முன்தினம் ஐந்தாம் நாளை முன்னிட்டு துர்கா மகளிர் மன்றம் சார்பில் விழாவில் குழந்தைகளின் பரதநாட்டியம் நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் சுவாமியை வழிபட்டனர்.