கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் லட்சதீபம் !
ADDED :4126 days ago
கடலூர்: கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவத்தையொட்டி பக்தர்கள் லட்சதீபம் ஏற்றி வழிபட்டனர். கடலூர் பாடலீஸ்வரர் கோவி லில் கடந்த 24ம் தேதி முதல் நவராத்திரி உற்சவம் நடைபெற்று வருகிறது. அதனையொட்டி கோவிலில் கொலு வைக்கப்பட்டுள்ளது. தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் மாலை லட்சதீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள், அகல் விளக்குகளை ஏற்றி அம்மனை வழிபட்டனர்.