லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சகஸ்ரநாம அர்ச்சனை!
ADDED :4075 days ago
புதுச்சேரி: ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில், நேற்று சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் லட்சுமி ஹயக்ரீவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று காலை 9.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை, லட்சுமி ஹயக்ரீவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை, லட்சார்ச்சனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த லட்சார்ச்சனை, மாணவ, மாணவியருக்கு கல்வி வளம், நல்லெண்ணம், நற்சிந்தனை, பாடங்களை நன்கு கற்றுணரும் திறன் அமைந்து, அனைத்து வளங்களும் பெறுவதற்காக நடத்தப்பட்டது. இந்த சகஸ்ரநாம அர்ச்சனையில் பங்கேற்ற மாணவர்களுக்கு, லட்சுமி ஹயக்ரீவர் திருவுருவப்படம், ரக்சை, பேனா மற்றும் துளசி, குங்குமம் பிரசாதமாக வழங்கப் பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி மற்றும் பக்த ஜன சபையினர் செய்திருந்தனர்.