கோவில் நிலங்களில் மணல் கடத்தலை தடுக்க பக்தர்கள் எதிர்பார்ப்பு!
ADDED :4130 days ago
மீஞ்சூர்: திருவுடையம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மீஞ்சூர் அருகில் உள்ள மேலுார் கிராமத்தில் திருவுடையம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான, 100 ஏக்கர் பரப்பளவில், விவசாய மற்றும் தரிசு நிலங்கள், கோவிலை சுற்றிலும் அமைந்து உள்ளன. மேற்கண்ட இந்த நிலங்களில், சமூக விரோதிகள் சிலர், இரவு நேரங்களில், டிராக்டர்கள் மூலம் மணல் வெட்டி எடுத்து செல்கின்றனர். இதனால் நிலங்களில் ஆங்காங்கே, பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. தொடர் மணல் கடத்தலால், கோவில் நிலங்கள் சீரழிக்கப்பட்டு வருகின்றன. கவால் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், மேற்கண்ட கோவில் நிலத்தில் நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.