பரமக்குடியில் கோயில்கள், வீடுகளில் நவராத்திரி கொண்டாட்டம்
ADDED :4127 days ago
பரமக்குடி : பரமக்குடியில் கோயில்கள், வீடுகளில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி பரமக்குடி சந்தனமாரியம்மன் கோயில், பத்தினிஅம்மன், அனுமார் கோயில், நயினார்கோவில் நாகநாதசுவாமி உள்ளிட்ட பல்வேறு கோயில்கள், வீடுகளில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் பெருமாளின் பத்து அவதாரங்கள், அஷ்டலட்சுமி, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம், திருமண காட்சிகள், பூங்கா, மிருகங்கள், பறவைகள் என பல்வேறு காட்சிகளை வைத்துள்ளனர். வீடு, கோயில்களில் தினமும் பஜனைகள், கோலாட்ட நிகழ்ச்சிகளுடன், பயறு, பொங்கல் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. இதே போல் அனைத்து கோயில்களிலும் மாலை சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்து வருகிறது. விழாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமான முறையில் கொண்டாடி வருகின்றனர்.