உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதூர் பெருமாள் கோவிலில் தங்க கருட வாகனத்தில் சேவை!

பாதூர் பெருமாள் கோவிலில் தங்க கருட வாகனத்தில் சேவை!

உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் ப்ரம்மோற்சவம் விழாவில் தங்க கருட சேவையில் சுவாமி உற்வம் நடந்தது. உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 24ம் தேதி துவங்கியது. தொடர்ந்து 28ம் தேதி இரவு சேஷ வாகனத்தில் சுவாமி உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை, பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தில் சிறப்பு திருமஞ்சனமும் நடந்தது. இரவு 10 மணிக்கு தங்க கருடத்தில் பெருமாள் சுவாமி உற்சவம் நடந்தது. நேற்று காலை திருப்பல்லக்கு, ஸ்ரீமதாதிவண் சடகோப யதீந்த்ர மஹா தேசிகன் திருவீதி புறப்பாடு, மதியம் சிறப்பு திருமஞ்சனம், இரவு யானை வாகனத்திலும் உற்சவமும் நடந்தது. இன்று மாலை 6:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண மகோற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தலைவர் வராஹசுவாமி, செயலாளர் கல்யாணரங்கன், பொருளாளர் மணி ஆகியோர் செய்கின்றனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா விஜயராகவ அய்யங்கார் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !