பழநிமலைக்கோயிலில் இன்று தங்கரத புறப்பாடு!
ADDED :4331 days ago
பழநி: நவராத்திரி விழாவை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் 10 நாட்களாக நிறுத்தப்பட்ட தங்கரத புறப்பாடு இன்று முதல் மீண்டும் நடக்கிறது. பழநி மலைக்கோயிலில் தினமும் இரவு 7:00 மணிக்கு மேல், தங்கரத புறப்பாடு நடக்கும். கந்த சஷ்டி, பெரிய கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி போன்ற விழாக் காலங்களில் மட்டும் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படும். இதன்படி, நவராத்திரி விழாவிற்காக செப்., 24 முதல் அக்.,3 வரை 10 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டு இருந்தது. நேற்று வன்னிகா சூரன் வதத்துடன் நவராத்திரிவிழா நிறைவடைந்தது. இதையொட்டி, மீண்டும் இன்று முதல் மலைக்கோயிலில் இரவு 7:00 மணிக்கு தங்கரத புறப்பாடு நடக்கிறது.