கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!
ADDED :4024 days ago
பாலக்காடு: ’விஜயதசமி’ நாளான நேற்று வித்யாரம்பம் நிகழ்ச்சி கேரளத்தில் பல்வேறு கோவில்களில் நடைபெற்றது. கோவில் தந்திரிகள், குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் விதமாக, இனிப்பை வழங்கி, நாக்கில் தங்க மோதிரத்தால் அட்சரம் எழுதி அரிசியில் ’ஓம் ஹரி ஸ்ரீ கணபதே நம’ என்று கையை பிடித்து எழுதி கற்றலை துவக்கி வைத்தனர். கேரள மாநிலம் மலப்புரம், திரூர் அருகே உள்ள துஞ்சன் பரம்பு கோவில், பாலக்காடு மாவட்டம் கல்லேக்குளங்கரை ஏமூர் பகவதி கோவில், சித்தூர் துஞ்சன் மடம் கோவில், கொடுந்திரப்புள்ளி கிராமம் அயப்பன் பெருமாள் கோவில், அய்யப்புரம் ஸ்ரீ பெருமாள் கோவில், வடக்கன்த்தறை திருப்புராய்க்கல் பகவதி கோவில், மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் ’விஜயதசமி’ விழா வித்யாரம்பம் நிகழ்ச்சி நடந்தது.