உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிடைமருதூரில் வார்ஷிக மஹோத்ஸவம்; பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு

திருவிடைமருதூரில் வார்ஷிக மஹோத்ஸவம்; பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழிபாடு

திருவிடைமருதூர்; திருவிடைமருதூர் ஸ்ரீ காஞ்சி சங்கர மடத்தில் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளால் பூஜ்யஸ்ரீ பகவத்பாடல் பாதுகா பிரதிஷ்டை தின வார்ஷிக மஹோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது. 


திருவிடைமருதூர், காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில் பகவத்பாத பாதுகா ப்ரதிஷ்டா தின வார்ஷிக மஹோத்ஸவ விழாவில் முன்னதாக, கடந்து 8 ம் தேதி வேத பாராயணம் மற்றும் சிறப்பு வழபாடுகள் விழா துவங்கியது. தொடர்ந்து, முக்கிய தினமான நேறறு 10ம் தேதி காலை 8 மணிக்கு பாராயணம் மற்றும் பகவத்பாதாள் பாதுகைக்கு அபிஷேகம் நடைபெற்றது. காலை 11:00 ~ 12:00 உபந்யாஸம் நடைபெற்று, தொடர்ந்து, மாலை 3:00 முதல் 5:30 ஜகத்குரு ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளால் ஸ்ரீ பகவத்பாதாள் திருவடிகளுக்கு அபிஷேகம் மற்றும் அத்வைத அஷ்டோத்தர ஸதம் சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமிகளிடம் ஆசி பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !