உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ருத்ர மகா யாகம் துவக்கம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ருத்ர மகா யாகம் துவக்கம்

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கோவை கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன மடம் சார்பில் உலக நன்மைக்காக பாடல்பெற்ற 12 தலங்களில் நடத்தப்படும் ருத்ரமகாயாகம் இன்று துவங்கியது.


கோவை மாவட்டம் கூனம்பட்டி ஆதீனம் மகர ஆதிரை மகோத்ஸவம் உலக நன்மை வேண்டி 12 பாடல்பெற்ற சிவத்தலங்களில் ருத்ரமகாயாகம் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக சோழ மண்டலத்தில் சிறுகுடி, திருவேலிமிழலை,திருக்குற்றாலம் ஆகிய சிவத் தலங்களில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது பாண்டிய மண்டலத்தில் முதல் தலமாக திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் இன்று காலை ருத்ரமகாயாகம் மற்றும் ருத்ர ஜெபம் துவங்கியது. யோக பைரவர் சன்னதி யாகசாலையில் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு 40 சிவாச்சார்யர்களால் யாகம் துவங்கியது. 22 சிவாச்சார்யர்கள் ருத்ர ஜெபம் செய்தனர். இன்று காலையில் முதற்காலமும், மாலையில் இரண்டாம் காலம் யாகமும் பூர்த்தியானது. நாளை காலை 9:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.தொடர்ந்து பூர்ணாகுதிக்கு பின் யாகசாலையிலிருந்து புனித நீர் கலசங்கள் புறப்பாடாகி மூலவர் திருத்தளிநாதருக்கு கலசாபிேஷகம் நடைபெறும். தொடர்ந்து சர்வ அலங்காரத்தில் மூலவருக்கு தீபாராதனை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !