நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில், பழம் வழங்கல்; 16வது ஆண்டாக சேவை
கூடலுார்; சபரிமலைக்கு நடந்து செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு கூடலுாரைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சரவணகுமார் 16வது ஆண்டாக தண்ணீர் பாட்டில், பழம் வழங்கி வருகிறார்.
கூடலுாரைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் சரவணகுமார். டேபிள், சேர் வாடகைக்கு கொடுக்கும் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 16 ஆண்டுகளாக சபரிமலைக்கு கூடலுார் வழியாக நடந்து செல்லும் அனைத்து பக்தர்களுக்கும் தண்ணீர் பாட்டில், வாழைப்பழம் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சீசன் துவங்கிய தினத்தில் இருந்து முடியும் வரை பக்தர்களுக்கு வழங்குவதுடன் அவர்களின் காலில் விழுந்து ஆசி பெற்று வழி அனுப்பி வைக்கிறார். பக்தர்களுக்கு தொடர்ந்து வழங்குவது மனநிறைவு ஏற்படுவதுடன் கூடலுாரில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் உள்ள குமுளி மலைப் பாதையில் நடந்து செல்லும் போது தண்ணீர் பாட்டில் வாழைப்பழம் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என சரவணகுமார் தெரிவித்தார்.