வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் மண்டல பூஜை கொடியேற்றம்
ADDED :5 hours ago
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், மண்டல பூஜை கொடியேற்றம் நேற்று நடந்தது.
வால்பாறை நகர் வாழைத்தோட்டம் ஐயப்ப சுவாமி கோவிலின், 66வது ஆண்டு மண்டல பூஜைத்திருவிழாவையொட்டி, நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. மாலை, 6:30 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, இரவு, 7:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்பசுவாமி எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வரும், 15ம் தேதி வரை நடைபெறும் விழாவில், தினமும் ஐயப்ப சுவாமிக்கு காலை, மாலை சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.