மயிலம் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :4020 days ago
மயிலம் : விழுப்புரம் வடக்கு மாவட்ட ஜெ.பேரவை சார்பில், மயிலம் முருகன் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். முன்னாள் முதல்வர் ஜெ., வழக்குகளிலிருந்து விடுதலையாக வேண்டி நடந்த சிறப்பு பூஜை நிகழ்ச் சிக்கு, மாவட்ட செயலா ளர் லட்சுமணன் தலைமை தாங்கினார். விழுப்புரம் எம்.பி., ராஜேந்திரன், மாவட்ட பேரவை செயலாளர் முரளி ரகுராமன், மாவட்ட சேர்மன் அலுமேலு வேலு முன்னிலை வகித்தனர். பூஜையின் போது, 108 தொண்டர்கள் மொட்டையடித்து கொண்டனர்.மயிலம் ஒன்றிய செயலாளர் சேகரன், பேரவை ஒன்றிய செயலாளர் காளிதாஸ், திண்டிவனம் நகர பேரவை செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய அவை தலைவர் ஆறுமுகம், கூட்டுறவு சங்க தலைவர் தயாளன், பேரவை நிர்வாகிகள் சிவக்குமார், நந்தகோபால், கோவிந்தன் கலந்து கொண்டனர்.