புனித ஜெபமாலை தேவாலயத்தில் தேரோட்டம்!
ADDED :4021 days ago
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை சர்ச்சில், நடந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கருமத்தம்பட்டியில் உள்ள புனித ஜெபமாலை மாதா சர்ச் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் 10 நாள் தேர்த்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் நடந்தன. சிறப்பு கூட்டுபாடற்பலி, மறையுரை நடந்தது.அக்., 3ம் தேதி கோவை மறை மாவட்ட ஆயர் தலைமையில் சிறப்பு கூட்டு பாடற்பலி பூஜை நடந்தது. 4ம்தேதி மாலை சிறு தேர் பவனியும், நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு மாதா தேர் பவனியும் நடந்தன. விழாவை முன்னிட்டு, சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜெரோம் அடிகள் தலைமையில், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.