உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி மலைக்கோயில் நாளை நடை அடைப்பு!

பழநி மலைக்கோயில் நாளை நடை அடைப்பு!

பழநி : சந்திரகிரகணத்தை முன்னிட்டு நாளை, பழநி மலைக்கோயில் நடை சாத்தப்படுகிறது. பழநி மலைக்கோயில் ஞானதண்டாயுதபாணி சுவாமி சன்னதி வழக்கம் போல் நாளை காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும். விஸ்வரூப தரிசன பூஜை நடைபெறும். பகல் 12 மணிக்கு உச்சி கால பூஜைக்கு பின் மாலை 5.30 மணிக்கு நடக்கும் சாயரட்சை பூஜை பகல் 1.30 மணியளவில் நடத்தப்படும். சந்திர கிரகணத்தை முன்னிட்டு பகல் 2 மணிக்கு நடைசாத்தப்பட்டு, அதன்பின் மாலை 6 மணிக்குமேல் கோயில் சுத்தம் செய்யப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெறும் என பழநி கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பரிகாரம் செய்வது யார்?: நாளை முழுமையான சந்திரகிரகணம் உண்டாவதையொட்டி, பரிகாரம் செய்ய வேண்டியவர்களைப் பற்றி பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளது. நாளை கேது கிரஸ்தமாக ரேவதி நட்சத்திரத்தில் உருவாகும் இந்த கிரகணம் பகல் 2.45 மணி தொடங்கி மாலை 6.04க்கு முடிகிறது. அசுவினி, ஆயில்யம், கேட்டை, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், புதன்கிழமையில் பிறந்தவர்களும் கிரகண சாந்தி பரிகாரம் செய்து கொள்ள வேண்டும் என தகவல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !